ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா
X

ஸ்ரீரங்கம் சித்திரை தேர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. காலை , மாலை என இரண்டு வேளைகளிலும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சித்திரை திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதிகாலை 4:45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு , அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்த நம்பெருமாள், அதிகாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார்.

பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி ,வடக்குச் சித்திரை வீதிகளில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம் விழாவை முன்னிட்டு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!