ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சார்பில் முககவசம், கபசுர குடிநீர், உணவு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சார்பில்  முககவசம், கபசுர குடிநீர், உணவு
X

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், உணவு, மாஸ்க் வழங்கியபோது

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சார்பாக இன்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், உணவு வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் வழிபாட்டு தலங்கள் மூலமாக பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படிஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக இன்று ஸ்ரீரெங்கா ரெங்கா கோபுர வாயிலில் முக கவசம் சுமார் 100 நபர்களுக்கும் ,கபசுர குடிநீர்ரும் சுமார் 200 நபர்களுக்கும் , வாழை இலையில் கட்டப்பட்ட உணவு பொட்டலங்கள் கோயில் வாயிலில் 440 நபர்களுக்கும் , ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 நபர்களுக்கு உணவு பொட்டலங்களும் திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் வழங்கப்பட்டது , மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!