ஸ்ரீரங்கத்தில் 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி

ஸ்ரீரங்கத்தில் 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி
X
ஸ்ரீரங்கத்தில்குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். முதல் கட்டமாக இதில் 2,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்

ஸ்ரீரங்கம் நெல்சன் தெரு, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி அருகே உள்ள ரேஷன் கடையில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டுறவு துறை அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!