ஸ்ரீரங்கம் தொகுதியில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

ஸ்ரீரங்கம் தொகுதியில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்
X
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கு. பா கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மகேந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார், முன்னதாக ஸ்ரீரங்கத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக தொண்டர் களுடன் ஊர்வலமாக வந்தார், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் க்கு முன்னால் அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதித்தனர், அதன்படி இரண்டு பேருடன் உள்ளே சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்..பின்பு செய்தியாளரிடம் பேசுகையில்..

ஸ்ரீரங்கம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக அனுமதி அளித்து இருக்கிறார்கள் மக்களின் நம்பிக்கையோடு இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்து இருக்கிறேன் என தெரிவித்தார்,

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்