கொரோனா ஒழிய வேண்டி ஸ்ரீரங்கத்தில் முதியவர் அங்கப்பிரதட்சணம்

கொரோனா  ஒழிய வேண்டி ஸ்ரீரங்கத்தில் முதியவர் அங்கப்பிரதட்சணம்
X

கொரோனா ஒழிய வேண்டி ஸ்ரீரங்கம் உத்தரவீதிகளில் முதியவர் அங்க பிரதட்சணம் செய்தார்.

உலகில் கொரோனா நோய் முற்றிலுமாக ஒழியக்கோரி ஸ்ரீரங்கத்தில் முதியவர் அங்கபிரதட்சணம் செய்தார்.

கொரோனா நோய் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. என்னதான் சமூக இடைவெளியை கடைபிடித்தாலும், முக கவசம் அணிந்து வெளியே சென்றாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் இன்னும் இந்த உலகை விட்டு கொரோனா முற்றிலுமாக ஒழிந்தபாடில்லை.

இந்நிலையில் கொரோனா ஒழியவேண்டி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் முன் முதியவர் ஒருவர் அங்க பிரதட்சணம் செய்து இறைவனை வேண்டினார். உலக மக்களின் நலன் கருதி இந்த வழிபாட்டை செய்த அந்த முதியவர் திருவாரூர் மாவட்டம் பேரளம் கிராமத்தை சேர்ந்த நாகராஜன்‌ (வயது78) ஆவார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா நோய் தொற்று ஒழிவதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றி 1.5 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள முக்கிய வீதியான 4 உத்திரவீதியில் காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கப்பிரதட்சணம் செய்தார். இறுதியாக ஸ்ரீரங்கத்தின் தெற்கு கோபுரத்தில் அங்கப்பிரதட்சணத்தை நிறைவு செய்தார்.

பொது நன்மை கருதி அவர் செய்த இந்த வழிபாட்டை கண்டவர்கள் மனதார பாராட்டி விட்டு சென்றனர்.

Tags

  • 1
  • 2

  • Next Story
    கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!