திருச்சியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா

திருச்சியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா
X
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. திருச்சியில் நாளொன்றுக்கு 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதால் வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ஜீயபுரம் அருகே திருச்செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
ai marketing future