திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்த வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்த வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
X
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்த வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீரங்கம் ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர்உசேன். இவரது மகன் அப்பாஸ் (25). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 31-ம் தேதி வீட்டு முன் நின்றிருந்த அப்பாஸை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் போதையில் தாக்கியுள்ளனர். அவரது வயிற்று பகுதியில் தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மீண்டும் அப்பாசுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை ஜாகீர் உசேன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த ஸ்ரீரங்கம் போலீசார் வாலிபர் அப்பாஸை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த அஜித் (25), மோகன்ராஜ் (24) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்