/* */

அரிவாள் வாங்க ஆதார் அவசியம்- திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி தகவல்

அரிவாள் வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரிவாள் வாங்க ஆதார் அவசியம்- திருச்சி மாவட்ட எஸ்.பி.மூர்த்தி தகவல்
X

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

"உங்கள் துறையில் முதல்வர்" என்ற பெயரில் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களின் பணியிடமாற்றம், சம்பள குளறுபடி, தண்டனை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை எஸ்.பி. மூர்த்தியிடம் கொடுத்தனர்.

இந்த குறைதீர் கூட்டத்தில் 40 பெண் காவலர்கள் உட்பட 135 பேர் மனு கொடுத்தனர். இதில் பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்.பி.மூர்த்தி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு எஸ்.பி.மூர்த்தி பேட்டி அளிக்கையில், திருச்சி மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்கும், ரவுடிகளை கண்காணிப்பதற்கும் சப்-டிவிஷன் என்ற 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரிவாள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் 36 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிவாள் வாங்க வருபவர்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் பட்டறை உரிமையாளர்கள் பெற வேண்டும். இந்த விவரங்கள் உடனுக்குடன் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

Updated On: 30 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்