ஸ்ரீரங்கத்தில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி தடுமாறி விழுந்து பலி

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி தடுமாறி விழுந்து பலி
X
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி தடுமாறி விழுந்து பலியானார்.

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் குமார் மனைவி லட்சுமி (வயது 69). உற்றார் உறவினர் இன்றி தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி வீட்டில் இருந்த லட்சுமி தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அருகே வசித்து வந்த சேட்டு (55) என்பவர் மூதாட்டி லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூதாட்டி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!