100 பேருடன் அதுக்கும் தயார், தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்: ரவுடி பேபி சூர்யா

100 பேருடன் அதுக்கும்  தயார், தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்: ரவுடி பேபி சூர்யா
X

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி ( பைல் படம்)

100 பேருடன் அதுக்கும் தயார், தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா யூடியூப் சேனலை முடிக்கினால் 100 பேருக்கு முந்தானை விரிப்பேன், விபச்சார வழக்கு தொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக எல்கேஜி மாணவர் முதல், உயர் கல்வி மாணவர் வரை அனைவரும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே கல்வி பயின்று வருகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி சமூக வலைதளங்கள் மூலம் ஆபாசத்திற்கு மாணவர்களை அடிமையாக்கி, தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ள பலர் முயன்று வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை காக்கும் நோக்கில் போலீசார் ஆபாச வலைதளங்களை முடக்கி வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்த ரவுடி பேபி என அழைக்கப்படும் டிக்டாக் புகழ் சூர்யாவின் யூடியூப் சேனலையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவுடி பேபி சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஆபாச வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் எனது சேனலை முடக்குறீங்களா, முடக்குங்க. நான் தவறான பாதைக்கு போவேன், சத்தியமா போவேன். என் பிள்ளை மேல ஆணையா போவேன், போவேன். 100 பேருடன் 'அதுக்கு தயார். என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்..என ரவுடி பேபி அருவருக்க தக்க வகையில் பேசியுள்ளார்.

இந்த வீடியே தற்போது வைரலாகி வருகிறது.இவ்வாறு ஆபாசமாக பேசும் ரவுடி பேபி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!