திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள்.

திருச்சி பாெதுப்பணித்துறை அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சியில்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீர்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் ௧௦௦க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகளை வைத்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.அப்போது அளவில் முன்பாக விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சோழசிராமணி, மொளசி மற்றும் மேட்டூருக்கு கீழே காவிரி ஆற்றில் ராஜ வாய்க்கால் ஆயக்கட்டு பாசன பகுதியை இறவை பாசன திட்டங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில தனி நபர்கள் வருமானம் ஈடுவதற்காக வழங்கப்பட்ட அனுமதியால் நாமக்கல் மாவட்டமே பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே அத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

மேகத்தாட்டுவில் அணை கட்ட கூடாது என தஞ்சாவூரில் பா.ஜ.க வினர் நடத்திய போராட்டத்தால் மேகத்தாட்டு கட்டும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை அதே நேரத்தில் கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தேகத்திற்குரிய நபராக இருக்கிறார்.அவர் ஏன் தன் ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்தார் என்பதும் சந்தேகமாக உள்ளது என்றார்.


Tags

Next Story
ai solutions for small business