ரேஷன் அரிசி தரமாக உள்ளதா? திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு

ரேஷன் அரிசி தரமாக உள்ளதா? என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு இன்று மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்றார். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்த அவர் அங்கு கருங்குளம் என்ற ஊரில் உள்ள நியாய விலை கடைக்கு திடீரென சென்றார்.

நியாய விலை கடையில் உள்ள அரிசி மற்றும் கோதுமை தரமாக உள்ளனவா? என்று ஆய்வு செய்தார். கடையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைகளுக்கு வினியோகம் செய்த விவரங்கள் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.

மேலும் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!