துவரங்குறிச்சியை அடுத்த வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

துவரங்குறிச்சியை அடுத்த வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு
X
துவரங்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9, 1/2 தங்க நகை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 54). விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி செல்வியும் மகனுடன் வெளியில் சென்றிருந்தார்.

இந்நிலையில் முருகானந்தத்தின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், பீரோவையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 9½ பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தியிருந்த காரில் ஏறி சென்று விட்டார். இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!