திருச்சி அருகே இரட்டை தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி; பாெதுமக்கள் வியப்பு
இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வில்லுக்காரன்பட்டியை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி. இவர் விவசாயத்துடன் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அவரது தோட்டத்தில் கருவுற்று இருந்த வெள்ளாடு இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி இரட்டை தலையுடன் கூடியதான குட்டி. ஓர் உடல் இரு தலைகள், நான்கு கண்கள், இரண்டு மூக்கு மற்றும் வாய் பகுதிகளை கொண்டுள்ளது. சாதரணமாக பிறந்த சில மணி நேரங்களிலேயே தாயிடம் பால் குடிக்கும் வழக்கம் கொண்ட ஆட்டுக்குட்டிகளில், இந்த இரட்டை தலை ஆட்டுக்குட்டி தலை பாரம் அதிகமானதால் பிஞ்சு கழுத்தால் இரு தலைகளையும் தூக்கிக்கொண்டு நிற்கக்கூட முடியாத நிலையில் உள்ளது.
அதனால் தாயிடம் சென்று பால் குடிக்கவும் முடியாமல் தவித்து வருகிறது. எனவே வேலுச்சாமி குடும்பத்தினர் அந்த குட்டிக்கு பால் பாட்டில் மூலம் பால் புகட்டி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி கால்நடை மருத்துவர்கள் விசாரித்து வருகின்றனர். இரட்டை தலையுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை அப்பகுதியில் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu