நடைபாலம் இடிந்து விழுந்து நடந்து சென்றவர் படுகாயம்

நடைபாலம் இடிந்து விழுந்து  நடந்து சென்றவர்  படுகாயம்
X
ஏற்கனவே பாலம் மிகவும் மோசமாக இருந்த நிலையில் அதைப்பற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஏற்பட்ட விபரீதம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சேசுராஜேந்திரன் வயது 45. கட்டிடத் தொழிலாளியான இவர் இன்று காலை தனது தோட்டத்தில் இருந்து வேலைக்கு செல்வதற்காக செவலூர் குளத்தில் இருந்து மரவனூர் குளத்திற்குச் செல்லும் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நடைபாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சேசுராஜேந்திரன் படுகாயமடைந்த நிலையில் நீண்ட நேரம் அதே பகுதியில் காயங்களுடன் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கிடந்துள்ளார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சப்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வந்து படுகாயமடைந்த நிலையில் கிடந்த சேசுராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே பாலம் மிகவும் மோசமாக இருந்த நிலையில் அதைப்பற்றி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால் நடந்து சென்ற போதே பாலம் இடிந்து விழுந்து கட்டிடத் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் அந்தபகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
future of ai in retail