பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் 2வது கட்டமாக தடுப்பூசி முகாம்

பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் 2வது கட்டமாக தடுப்பூசி முகாம்
X

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் 2வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் 2வது கட்டமாக நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி தொடங்கி வைத்தார்.

பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் 2வது நாளாக நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முகாமில் எதிர் பார்த்ததைவிட அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தனர்.

இதனையடுத்து 2வது நாளாகவும் கொரோனா தடுப்பூசி முகாம் செயின்மேரிஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அதிகமானோர் வந்தனர். இன்னும் பல கட்டங்களாக ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் செல்வி விஜயகுமார், ஒன்றியகவுன்சிலர் கவிதா செந்தில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கம்மாள், மூர்த்தி, செந்தில், பூர்ணவள்ளி , டிரான்ஸ்போர்ட் மோகன், ரயில்வேயைச் சேர்ந்த மாதவன், ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!