தேசிய நெடுஞ்சாலை மறியலில் கைது செய்யப்பட்ட 27 பேர் சிறையில் அடைப்பு

தேசிய நெடுஞ்சாலை மறியலில் கைது செய்யப்பட்ட 27 பேர் சிறையில் அடைப்பு
X
திருச்சி தேசிய நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட டிரைவர்கள் 27 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மாந்துறையில் ஒரு வழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப் பட்டதை அறிந்த மற்றொரு ஓட்டுனர்கள் சங்கமான உரிமைக்குரல் இருவழிப்பாதை ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சங்கத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து நம்பர் 1 டோல்கேட் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கார்களை நிறுத்தி சாலையில் அமர்ந்து ஒருவழிப்பாதை ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட ராஜா (வயது 51), தண்டபாணி (52), ஆரோக்கியபிரபு (42), பாலசுப்ரமணி (37), காமேஷ் (27), முருகேசன் (30), ஏழுமலை (41) உள்பட 27 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!