சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி
X
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.09 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் பெறப்பட்டுள்ளது.

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவர்.

இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் 2 முறை எண்ணப்படுகிறது. இதன்படி, நேற்று கோவில் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உண்டியல் எண்ணிக்கை முடிவில், கடந்த 16 நாட்களில் கோயில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 784 ரொக்கம் வாசூலாகி உள்ளது. மேலும், 3 கிலோ 729 கிராம் தங்கம், 5 கிலோ 725 கிராம் வெள்ளி மற்றும் 140 வெளி நாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!