சமயபுரம் கோவில் உண்டியல் எண்ணும் பணி

சமயபுரம் கோவில் உண்டியல் எண்ணும் பணி
X

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பைல் படம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.52 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் பெறப்பட்டது

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் ஒரு முறை, உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, மார்ச் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் மண்டபத்தில், இணை ஆணையர் கல்யாணி தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், தன்னார்வலர்கள், பக்தர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், உண்டியல் காணிக்கையாக ரு.1 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 725 ரொக்கப்பணம் கிடைக்கப் பெற்றது. மேலும், 3 கிலோ 295 கிராம் தங்கமும், 5 கிலோ 201 கிராம் வெள்ளியும் வசூலானது. மேலும், 80 வெளி நாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!