'கண் பட்டிடுச்சாம்' திமுக வேட்பாளருக்கு திருஷ்டி கழித்த திருநங்கைகள்

கண் பட்டிடுச்சாம்   திமுக வேட்பாளருக்கு  திருஷ்டி கழித்த  திருநங்கைகள்
X
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு திருநங்கைகள் திருஷ்டி கழித்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்டபாளர் கதிரவன் மணியம்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்க வந்த போது, 10 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வேட்பாளருக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்தனர்.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள புலிவலம், மணியம்பட்டி, பெரமங்கலம், குருவிக்காரன்குளம், தெற்குபள்ளம், அண்ணாநகர், உடையான்பட்டி, பெரிய காட்டுகுளம், சின்னகாட்டுகுளம் , தண்ணீர் பந்தல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாக நடந்து சென்று வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

'நீங்கள் என்னை எம்எல்ஏ வாக வெற்றி பெறச் செய்தால் உங்களது கோரிக்கைகள் அனைத்தும், முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலிடம் கூறி நிறைவேற்றி தருவேன். இதற்கு முன் இருந்த அதிமுக எம்எல்ஏ ஓட்டு கேட்க வந்தார். வெற்றி பெற செய்தோம். அதன் பின்னர் தொகுதி பக்கமே வரவில்லை எனக் கூறுகின்றனர். ஆனால், நான் அப்படி இருக்க மாட்டேன். உங்களில் ஒருவனாய், உங்களோடு, ஓருவனாய் இருப்பேன்.' என்று உறுதி அளித்தார்.

அப்பகுதி மக்கள் வேட்பாளருக்கு மாலை அணிவித்து, பூக்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். திமுக ஒன்றிய செயலாளர் காட்டுகுளம் கணேசன், மதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் டிடிசி. சேரன், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர் காட்டுகுளம் கணேசன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!