திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை
X

கொள்ளை நடந்த வீடு. 

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை அடித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மாந்துறை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழ்சுந்தரி (வயது 42). இவர் லால்குடி அருகே உள்ள விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புமாந்துறை பகுதியில் வீடு விலைக்கு வாங்கி குடியேறியுள்ளார். கணவனை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்சுந்தரி தனது சொந்த ஊரான விரகாலூர் சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.1.40 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதையடுத்து லால்குடி போலீசில் இது குறித்து கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்து தமிழ்சுந்தரியிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future