சா.அய்யம்பாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக உரிமை முழக்க போராட்டம்

சா.அய்யம்பாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக உரிமை முழக்க போராட்டம்
X

திருச்சி மாவட்டம் சா.அய்யம்பாளையத்தில் திமுக அரசை கண்டித்து மாவட்ட கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்.

சா.அய்யம்பாளையத்தில் திமுக அரசை கண்டித்து உரிமை முழக்க போராட்டம் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டது. வெற்றிப் பெற்றால் செய்வேன் என்று கூறிய எதையும் செய்யவில்லை,

நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, மாதம் தோறும் குடுமப பெண்களுக்கு ரூ 1000 வழங்க வில்லை, இதுபோன்று சொன்னதை எதையும் செய்யவில்லை வாக்களித்த மக்கள் ஆட்சியில் ஏமாற்றம் அடைத்துள்ளனர்.

பொதுமக்களின் வெறுப்பை திசை திருப்பும் வகையில் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு பழிவாங்கும் வகையில் நடந்து கொள்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆதாளி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் செல்வராஜ், சிங்காரம், ஊராட்சி செயலாளர் கந்தசாமி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட தலைவர் சந்திரமோகன்,

மண்ணச்சநல்லூர் ஐடி விங் செயலாளர் கிரி, கிளைச் செயலாளர்கள் ஆனந்தன், தங்கவேல், ராமலிங்கம், கனகராஜ், கமல், கோவிந்தராஜ், கோபால், சுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இனாம் கல்பாளையம் ஊராட்சி

இனாம்கல்பாளையம் ஊராட்சியில் நடந்த உரிமை முழக்க போராட்டத்திற்கு அதிமுக மாணவரணி துணை செயலாளர் எம்ஆர்வி பாஸ்கரன் தலைமை வகித்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!