திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்

திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்
X

அமைச்சர் மா. சுப்பிரமணியம் 

திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார். பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து புறப்படும் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் 4-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. 14 மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்தாலும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

கொட்டும் மழையிலும் மக்கள் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் இன்று 24 ஆயிரத்து 882 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேர் இன்று மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சியை பொறுத்தவரை இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். தமிழகத்தில் 62 சதவீதம் பேரும், திருச்சியில் 63 சதவீதம் பேரும் முதல் டோஸ் ஊசி போட்டுள்ளனர். தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு பணியாற்றியவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!