மக்களின் நலன்காக்கவே தடுப்பூசி விலைக்கு வாங்கி இலவசமாக தருகிறது என அமைச்சர் தகவல்
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் பகுதி கிராமங்களில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் புன்னக்காயல், ஆறுமுகநேரி பேரூராட்சி அடைக்கலாபுரம், வீரபாண்டியபட்டிணம் ஆகிய கிராமங்களில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் பொதுமக்களிடம் "அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு உங்களின் நலன் காக்கவே தடுப்பூசி மருந்தினை விலைக்கு வாங்கி இலவசமாக போட்டு வருகிறது. தடுப்பூசி போட்டால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். அரசின் ஊரடங்கு விதியை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ராமஜெயம், எஸ்.ஜெ.ஜெகன், ஸ்ரீதர் ரோட்டிரிகோ, எ.பி.ரமேஷ், ஆனந்த் ரோட்டிரிகோ, திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, புன்னக்காயல் ஊராட்சி தலைவர் சோபியாஆல்வின் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu