தமிழகத்தில் மீன்விற்பனை கூடங்கள் மேம்படுத்த நடவடிக்கை-அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மீன்விற்பனை கூடங்கள் மேம்படுத்த நடவடிக்கை-அமைச்சர் தகவல்
X
சென்னை காசிமேடு, தூத்துக்குடி மீன்பிடிதுறை முகங்களில் மீன்விற்பனை கூடம் மேம்படுத்தபட உள்ளது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சிங்கிதுறை, அமலிநகர், கொம்புத்துறை நாட்டுப்படகு மீனவர்களுக்கு அரசு மானியதுடன் கூடிய வெளிப்படுத்தும் இயந்திரங்களை இன்று தமிழக மீன் வளம் மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

அமலிநகரில் உள்ள மீனவர்களுக்கு இயந்திரங்களை வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் :- மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த துறைக்கு மீன்துறை என்பதுடன் மீனவர் நலன் என்ற பெயரை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இன்று 25 மீனவர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சத்து 35ஆயிரம் மதிப்பிலான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு அரசு 40 சதவீதம் மானியமாக வழங்கும் என்றார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இயந்திரத்தை மாற்றி கொள்ளலாம் என்ற திட்டம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி கொள்ளலாம் என மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், சென்னை காசிமேடு, தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகங்களில் மீன்விற்பனை கூடம் மேம்படுத்தபட உள்ளது என்ற அவர், தூண்டில்வளைவு அமைத்தல், மீன் ஏலக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் 3 முதல் 6 மாதங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து மீன்விற்பனை கூடங்களையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர், ஆத்தூரில் நலிந்த குடும்பத்தினருக்கு கொரானா நிவாரண உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அசைக்க முடியாத அடையாளம்..!திருச்செங்கோட்டில் 60-அடி திமுக கொடிக்கம்பம்..!