பறக்க முடியாமல் தவித்த மயிலுக்கு உதவிய இளைஞர்கள்

பறக்க முடியாமல் தவித்த மயிலுக்கு உதவிய இளைஞர்கள்
X

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் பறக்க முடியாமல் தவித்த மயிலை மீட்ட இளைஞர்கள் அதை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி விவசாய நிலப் பகுதியில் மயில் ஒன்று பறக்க முடியாமல் தவித்த நிலையில் காணப்பட்டது. இதனைக் கண்ட வயலுக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் அதனை மீட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். புதுக்கோட்டையில் இருந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மயிலுக்கு முதலுதவி கொடுத்து மயிலை காட்டில் விடுவதற்காக கொண்டு சென்றனர். பறக்க முடியாமல் தவித்த மயிலை மீட்ட அத்திமரப்பட்டியை சேர்ந்த இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா