மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
X

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்.

மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடைபெறும் முதல் குறைதீர் கூட்டம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வந்திருந்தனர்.

ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சாமிநத்தம், நடுவக்குறிச்சி, சுந்தரலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாக எங்களது கிராம மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வந்தனர். ஆலை மூடப்பட்டதால் பலர் வெளியூருக்குச் சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவ பயன்பாட்டுக்காக ஆக்ஸிஜனை தயார் செய்து நாட்டுக்கு வழங்கியது ஸ்டெர்லைட் ஆலை தான். உயிர்பலியை ஏற்படுத்துவதாக சொல்லப்பட்ட ஒரு ஆலை தொற்று பரவிய ஆபத்தான சூழ்நிலையில் இலவசமாக ஆக்சிஜன் தயாரித்து வழங்கியதை, அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதால் இந்தியாவில் தாமிர தேவை அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து தாமிரம் இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றிட உள்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கூறினர்.

Tags

Next Story