தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனி அதிபர் கார் திருட்டு : போலீஸார் விசாரணை

தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனி அதிபர் கார் திருட்டு : போலீஸார்  விசாரணை
X

தூத்துக்குடியில் திருடு போன கார்

மர்ம நபர் அந்த காரை கள்ளச்சாவி போட்டு திருடி சென்றது தெரியவந்தது.

தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனி அதிபரின் காரை திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவியில் கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி என்.ஜி.ஓ., காலனி 3வது தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம், இவரது மகன் சுந்தர் கணேஷ் (28). ஷிப்பிங் கம்பெனி அதிபரான இவர், தனக்கு சொந்தமான இனோவா காரை கடந்த 17ஆம் தேதி இரவு தனது வீட்டு முன்பு நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றவர். மறுநாள் காலையில் பார்த்தபோது காரை காணவில்லை. தொலைந்து போன அந்த காரின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

இதையடுத்து அவர் தனது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, மர்ம நபர் அந்த காரை கள்ளச்சாவி போட்டு திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தென்பாகம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரெனிஸ் ஜேசுபாகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.சிசிடிவியில் பதிவான கேமரா காட்சிகள் மூலம் காரை திருடிச் சென்ற அந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil