நமக்கு நாமே திட்டம்: தூத்துக்குடி மாநகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்

நமக்கு நாமே திட்டம்: தூத்துக்குடி மாநகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்
X

தூத்துக்குடி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்ட செயல்பாடுகள் தொர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ 

நமக்கு நாமே திட்டத்தில் 100 % வீதத்தில் 33 % பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்பு மூலம் பல்வேறு பணிகளை நிறைவேற்றலாம்

தூத்துக்குடி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் செயல் பாட்டு வழிமுறைகள் குறித்ததான கலந்தாய்வுக் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடை பெற்றது.

இக்கூட்டத்தில், வர்த்தக நிறுவன கூட்டமைப்பினர், வணிக நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் நமக்கு நாமே திட்டத்தில் 100 சதவீதத்தில் 33 சதவீதம் பொதுமக்கள் மற்றும் தன்ஆர்வலர்கள் பங்களிப்பு மூலம் மாநகராட்சி பகுதிகளில், கான்கீரிட் ரோடு, தார்ச்சாலை, பேவர்பிளாக் சாலைகளில் இதன் பங்களிப்பு குறித்து இக்கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில், மாநகராட்சி செயற்பொறியாளர் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறி யாளர்கள், மின் கண்காணிப்பாளர் மாரிமுத்து, டி.ஏ.தெய்வநாயகம், விவிடி ரவீந்திரன், துடிசியா தலைவர் நேருபிரகாஷ் உள்ளிட்ட வர்த்தக நிறுவன கூட்டமைப்பினர், வணிக நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் மாநகராட்சி அதிகரிகள் சரவணன், பிரின்ஸ் மற்றும் பலவேறு பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers