தூத்துக்குடியில் செப். 23ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் செப். 23ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளிக்காட்சி மூலம் வரும் 23ம் தேதி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளிக்காட்சி மூலம் 23ம் தேதி காலை 11.00 மணியளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து காணொளிக்காட்சி மூலம் பங்கேற்றுப் பயனடைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு 23ம் தேதி காணொளிக் காட்சி மூலம் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். தங்கள் கோரிக்கை மனுக்களை 23ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

அவைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து உரிய பதில் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

எனவே, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் காணொளிக்காட்சி மூலம் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!