தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்
X
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டிரைவர் வெட்டி படுகொலை. 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டிரைவர் வெட்டி கொலை: 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம்பண்ணையை சேர்ந்தவர் நெல்லையப்பன். இவருடைய மகன் முத்துப்பாண்டி(45). இவர் தற்போது புதுக்கோட்டை அய்யனார் காலனியில் வசித்து வருகிறார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மாலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்தபோது, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர். அவர்கள் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக முத்தப்பாண்டியை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் பியா வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொலையாளிகள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முத்துப்பாண்டி கஞ்சா விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோனத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai healthcare technology