தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர்  தகவல்.
X

தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில்வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் 13.42 டன் விற்பனை செய்யப்ட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள், பழங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கோவிட் - 19 இரண்டாவது அலை பெருந்தொற்றிலிருந்து, பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு இன்று (24.05.2021) முதல் ஒருவார காலத்திற்கு தளர்வில்லாத பொது முடக்கம் அறிவித்துள்ளது.

மேற்படி பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைகளில் காய்கறிகள், பழங்களின் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி, தோட்டக்கலைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண் விற்பனைத்துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும்; காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேளாண்மை துறையின் மூலம் 29 வாகனங்களிலும், தோட்டக்கலை துறையின் மூலம் 45 வாகனங்களிலும், வேளாண்மை விற்பனைத்துறையின் மூலம் 5 வாகனங்களிலும்; ஆக மொத்தம் 79 வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இல்லம் தேடி 13.42 டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று மட்டும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் இச்சேவை தொடரும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!