மின் உற்பத்தியில் சாதனை: தூத்துக்குடி அனல் மின் நிலையம் அசத்தல்

மின் உற்பத்தியில் சாதனை: தூத்துக்குடி அனல் மின் நிலையம் அசத்தல்
X
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1050 மெகாவாட்டை விட ஒரே நாளில் 1077 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1050 மெகாவாட்டை விட ஒரே நாளில் 1077 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் மின்சார தேவையில் முக்கிய பங்காற்றுகிறது தூத்துக்குடி அனல் மின் நிலையம். இதேபோல் தூத்துகுடி நகர் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் அங்கிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 21ம்தேதி நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மூன்று யூனிட்டுகளில் ஒரே நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இதன் காரணமாக தற்போது அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் ஜந்து யூனிட்டுகளில் 1077 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1050 மெகாவாட் விட அதிகமாக 1077 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!