விவசாயிகள் மீது தடியடி- தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் மீது தடியடி- தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்
X

டெல்லியில் விவசாயிகள் மீதான தடியடியை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகரில் இன்று (27 ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்சுனன் தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநகர செயலாளர் ஞானசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மதிமுக இலக்கிய அணி செயலாளர் நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ ரசல், விவசாயிகள் சங்கம் ஆறுமுகம், சிபிஐ மாநகர உதவி செயலாளர் மாடசாமி, ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்தனசேகர், டிஒய்எப்ஐ மாவட்ட செயலாளர் முத்து, மற்றும் பாண்டி, பலவேசம், சுப்பிரமணியன், முத்தையாபுரம் காளீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!