கோவில்பட்டி அருகே ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

கோவில்பட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைபொருட்கள்

கோவில்பட்டி அருகே ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து. வியாபாரியை கைது செய்தனர்.

கோவில்பட்டி அருகே, பாண்டவர்மங்கலம் ஊராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் போலீசார் செந்தில்குமார், சரவணகுமார், ஆனந்த் அமல்ராஜ், முகமது மைதீன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாண்டவர்மங்கலம் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவருடைய பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோவில்பட்டி, ராஜீவ் நகர், இ.பி காலனியைச் சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (44) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!