திருவாரூரில் மோடி, மத்திய மந்திரி உருவபடங்களை எரித்த விவசாயிகள்

திருவாரூரில் மோடி, மத்திய மந்திரி உருவபடங்களை எரித்த விவசாயிகள்
X

திருவாரூரில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

உ.பி. சம்பவத்தை கண்டித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உருவ படத்தை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சர் மகன் சென்ற கார் விவசாயிகள் போராட்டத்தில் புகுந்ததால் 5 பேர் உயிரிழந்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதுடன் மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்நிலையில் இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே ஐக்கிய விவசாய சங்கத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் பிரதமர் மோடி, மத்திய உள்ளதுறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யா ஆகியோர் மத்திய மந்திரிக்கு துணைபோவதாக கூறி மூவரின் உருவப்படங்களை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மூவரையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!