திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
X

காெள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் மதுபான கடை.

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் சிசிடிவி கேமரா மற்றும் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி. போலீசார் விசாரணை.

திருவாரூர் அருகே முகந்தனூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டுடையான்யிருப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு கடையை திறக்க வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு மற்றும் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தின் பேரில் விரைந்து வந்த போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கடையின் வெளி பக்க கதவை உடைத்து நிலையில் உள்பக்கம் இருந்த கதவை திறக்க முடியாமல் விட்டு சென்றது தெரியவந்தது. இதனால் கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் தப்பியது. மேலும் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!