நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை

நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை
X
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, காவல்துறைச் சார்பில் நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கொரோனா தொற்றின் காரணமாகத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

அத்துடன், வெற்றி பெறும் வேட்பாளர்கள், வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்த்திட வேண்டுமெனவும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
இந்த சூழலில், நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று, காவல்துறைச் சார்பாக அறிவுரை வழங்குவதற்காக, போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம், நன்னிலம் உட்கோட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது.

இதில், நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். காவல்துறை ஆய்வாளர்கள் நன்னிலம் கு.சுகுணா, பேரளம் மு.மணிமாறன், குடவாசல் க.ரேகாராணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!