மன்னார்குடி அருகே கொரோனா தடுப்பூசி முகாம்

மன்னார்குடி அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
X

மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்.

மன்னார்குடி அருகே சவளக்காரன் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சியில் 18 வயது முதல் 44வயதுக்கு உட்பட்ட வர்களுக்கும், அதற்கு மேற்பட்ட வயது கொண்டவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் வனிதா அருள்ராஜன் தடுப்பூசி முகாமை மருத்துவர்கள் தமிழ்வேல், மமிதா ஆகியோர் முன்னிலையில் தொடக்கி வைத்தார்கள்.

இதில் பாமணி கூட்டுறவு சங்க இயக்குநர் எஸ்.பாப்பையன், சுகாதார கண்காணிப்பாளர் சீதாலெட்சுமி, கிராம சுகாதார செவிலியர் மகாலெட்சுமி, ஊராட்சி செயலாளர் எஸ்.என்.பாஸ்கர், திமுக ஊராட்சி செயலாளர் எஸ்.சாலமன், ஆர்.சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கே.ராஜசேகர், அங்கன்வாடி பணியாளர்கள் என்.மகேஷ்வரி, வி.ஜெயா, எஸ்.சந்தனமேரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோரோனா தொற்று தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள 18வயது முதல் 44 வயது உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் சுகாதார துறை அலுவர்கள் அறிவுறுத்தினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!