/* */

இடைத்தேர்தலில் போட்டியிட அண்ணாமலை தயங்குவது ஏன்?

தமிழக பாஜகவின் இரண்டாம் கட்டத்தலைவர் கள் மற்றும் ஈரோடு நிர்வாகிகள் வலியுறுத்தியும் அண்ணாமலை களமிரங்க தயங்குகிறார்

HIGHLIGHTS

இடைத்தேர்தலில் போட்டியிட அண்ணாமலை தயங்குவது ஏன்?
X

பாஜக தலைவர் அண்ணாமலை(பைல் படம்)

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் இம்முறையும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.

இந்நிலையில், ஒரு கட்சி எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை இடைத்தேர்தலில் போட்டியிட்டால் தெரிந்துக் கொள்ளலாம் என பாஜக முன்னாள் தலைவர் அமித் ஷா கூறி வரும் நிலையில் அதனை தமிழகத்தில் செயல்படுத்த முடியாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவித்து வருகிறார்.

அண்மையில் தமிழகம் வந்த தேசியத்தலைவர் நட்டா, அமித்ஷா உள்ளிட்ட அனைவரும் எந்த தேர்தல் வந்தாலும் அதற்கான வியூகத்தை அமைத்து நாம் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தித்தான் சென்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவித்தவுடன் நிர்வாகிகளிடம் பேசிய அண்ணாமலை நிச்சயம் போட்டியிடுகிறோம் என கூறி, தேர்தல் பணிக்குழுவை அமைத்தார். ஆனால் எங்களுடன் சிறிதும் கலந்து ஆலோசிக்காமல் ஈபிஎஸ், தமாகா வாசனுடன் மட்டும் ஆலோசித்து போட்டி என அறிவித்து விட்டார்.

இதனால் தமிழக பாஜக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். நாம் நிச்சயமாக போட்டியிட வேண்டும். நம்மை ஈபிஎஸ் மதிக்கவில்லை. அதே நேரத்தில் ஓபிஎஸ் நமக்கு ஆதரவாக பணி செய்ய தயாராக உள்ளார். அகில இந்திய தலைமை மூலம் டி.டி.வி.தினகரனிடமும் பேசலாம் என இரண்டாம் கட்ட தலைவர்கள் அண்ணாமலையிடம் வலியுறுத்தினர். ஆனால் அண்ணாமலையோ அதனைக் கண்டுக்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து கரு.முருகானந்தம், முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் அகில இந்திய தலைமைக்கு கடிதம் எழுதினர். வானதி சீனிவாசன் நேரடியாகவே தலைமையிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதனை எல்லாம் அறிந்துக் கொண்ட அண்ணாமலை, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இருக்கும் தனது குருவான எல்.கே.சந்தோஷ் மூலமாக தலைமையிடம் பேசி அதை சரி செய்துவிட்டார். அவர்களும் மூன்று மாநில தேர்தலில் கவனம் செலுத்துவதால் இதனைக் கண்டுக் கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

அண்ணாமலை இடைத்தேர்தலை தவிர்க்க என்ன காரணம் என அகில இந்திய தலைமைக்கு கடிதம் எழுதிய முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம், அண்ணாமலைக்கு பயம் தான் காரணம். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளோம். பாஜக போட்டியிட்டால் திமுக தனது முழு பலத்தைக்காட்டும். அதனால் கடுமையான தோல்வியை சந்தித்தால் தனது பிம்பம் உடைந்து விடுமோ என அவர் அச்சப்படுகிறார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அது உடைய வேண்டாம் என நாங்கள் விரும்புகிறோம். அப்போது தான் கட்சிக்கு நல்லது. இதுத்தொடர்பாக நாளை நடைபெறவுள்ள மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலையிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளோம் என கூறினர்.

Updated On: 31 Jan 2023 2:30 AM GMT

Related News