ஆவணப்படத்திற்கு ஏன் ஆஸ்கர் கிடைத்தது?
![ஆவணப்படத்திற்கு ஏன் ஆஸ்கர் கிடைத்தது? ஆவணப்படத்திற்கு ஏன் ஆஸ்கர் கிடைத்தது?](https://www.nativenews.in/h-upload/2023/03/14/1679455--.webp)
பைல் படம்
The Elephant Whisperers சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருது பெறும் முதல் இந்திய ஆவணப்படம் இதுதான் என்பது பெருமைக்குரியது.
இந்த ஆவணப்படத்தை தயாரித்திருப்பவர்கள் குனீத் மோங்கா, அசின் ஜெயின், கார்த்திகி கோன்சால்வெஸ், டக்ளஸ் புஷ். இயக்கி இருப்பவர் நீலகிரியைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வெஸ். 37 வயதான கார்த்திகியின் தந்தை திமோதி கோன்சால்வெஸ் சென்னை ஐ ஐ டியில் கல்வி பயின்று மேல்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர். ஐடி துறையில் வல்லுநர். நாடு திரும்பி ஐடி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி இருக்கிறார். மாண்டி ஐ ஐ டி யை நிர்வகித்து வந்துள்ளார்.
சிறு வயது முதலே தெப்பக்காடு யானைகள் சரணாலயத்துக்கு அடிக்கடி சென்று வந்த கார்த்திகிக்கு யானைகள் மேல் உள்ள காதல் இந்த ஆவணப்படத்துக்கு அடித்தளமாக அமைந்தது. கைவிடப்பட்ட ரகு என்ற யானைக்குட்டிக்கும் அதைப் பராமரிக்கும் பொம்மன் பெள்ளி என்ற காட்டுநாயக்க இன தம்பதிக்கும் இடையே உள்ள அழகிய பந்தத்தை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது இப்படம்.
அடிப்படையில் தனக்கு இயற்கை வெளிச்சத்தில் படம் பிடிப்பது அதிகம் பிடிக்கும் எனச் சொல்லும் கார்த்திகி, இயற்கை மட்டுமல்லாமல் மலைவாழ் மக்களின் பண்பாடு, வாழ்வியல் முறைகளையும் ஆவணப்படுத்தி வந்துள்ளார். டிஸ்கவரி உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். புகைப்படக் கலைஞராகவும் காட்டுயிர் ஆர்வலராகவும் இருக்கும் கார்த்திகி, இயக்கிய முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்று விட்டார்.
இந்திய தயாரிப்பு ஒன்றுக்கு முதல் ஆஸ்கரை வென்று இருக்கிறோம். இரண்டு பெண்கள் இதைச் செய்திருக்கிறோம். நான் நடுங்கிக் கொண்டுதான் இருக்கிறேன் என தன் டிவிட்டர் பக்கத்தில் எழுதி இருக்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத். பெண்கள் நினைத்ததால் எதுவும் முடியும். Work in sisterhood, walk the untrodden path and success will be yours. பெண்கள் இருவருக்கும் நம் கனிவான வாழ்த்துகள்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu