யாருக்கு இரட்டை இலை சின்னம்..? இரண்டு நாளில் விடை தெரியும்
பைல் படம்
அதிமுகவுக்கு உரிமை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கினை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் மூன்று நாட்களுக்குள் தலைமை தேர்தல் ஆணையர் முடிவெடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இதனால் இன்னும் இரு நாட்களில் இரட்டை இலை யாருக்கு என்ற விஷயம் முடிவுக்கு வரும் நிலையில், இரு அணியினரும் தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளதால் அதிமுகவில் இரு அணியினரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால், இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும். அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை அங்கீரிக்க வேண்டும். உச்ச நீதின்றத்தின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும். தற்போதைய நிலையில் நான்தான் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதால், எனக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
அதில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்தால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அல்லது தீர்ப்பு சாதகமாக இல்லாவிட்டால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவது என்று எண்ணத்தில் இ.பி.எஸ்., உள்ளார். இதற்காக 30ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளார். உச்ச நீதின்றம் தீர்ப்பு வந்த பிறகே, தனது அணி வேட்பாளரை அறிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பாஜவின் முடிவுக்காக காத்திருக்கிறார். அவரும் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து சிக்கலும், இழுபறியும் நீடிக்கிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு தலைவர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், சுப்புரத்தினம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் உச்ச நீதின்ற விவகாரம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஈரோட்டில் உள்ள ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். நேற்று காலையிலும் ஆலோசனை நடத்தினார். இருவருமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதால், அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. வேட்புமனு தாக்கல் 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. சின்னம் இல்லை. எப்படி ஒரு மாதத்தில் மக்களை சந்திப்பது என்று அதிமுகவில் இரு அணியினரும் குழப்பம் அடைந்துள்ளனர். தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர். அதிமுக தலைவர்களும் கடும் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu