/* */

பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் இனி இரண்டாக பிரியுமா?

தமிழகத்தில் இனி பா.ஜ.க.எதிர்ப்பு ஓட்டுகள் யாருக்கு? இரண்டாக பிரியுமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

பாஜக  எதிர்ப்பு ஓட்டுகள்  இனி இரண்டாக பிரியுமா?
X

பைல் படம்

இதுவரை பா.ஜ.க., எதிர்ப்பு ஓட்டுக்களை தி.மு.க., ஒட்டுமொத்தமாக சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்து வெற்றியை ஈட்டி வந்தது. இப்போது சூழல் சற்று மாறி உள்ளது.

வரும் 2026-ல் நாங்கள் தான் முதல்வர், தமிழகத்தை ஆளப்போவது பாஜக தான் என்ற அண்ணாமலையின் பேச்சு தான் கூட்டணி உடைய காரணம் என சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில், தமிழ்நாடு எப்போதுமே தேசிய கட்சிகளின் ஆட்சியை எதிர்த்து வந்திருக்கிறது. 1967ம் ஆண்டோடு தேசிய கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் முடிவுக்கு வந்து விட்டது. ஆக மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதே தமிழகத்தின் தாரக மந்திரம். இனி எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி தற்போது அறிவித்துள்ளது, ஜெயலலிதாவின் நிலைப்பாடு தான்.

திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகளை இணைத்து போட்டியிடலாம் என்று அதிமுக நினைக்கலாம். ஆனால், அது உறுதியாக நடக்குமா என்று தெரியவில்லை. அதிமுகவின் நிலைப்பாடு தேர்தல் சமயத்திலும் மாறலாம் அல்லது கடைசி நேரத்தில் பங்கீடு கேட்கலாம்.

ஆனால், திமுகவுக்கு இதுவரை வெற்றிகளை பெற்று தந்து வருவது, பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் தான். இந்த ஓட்டுக்களை, அதிமுகவும் இனிமேல் தன்பக்கம் இப்போது திருப்ப வேண்டி உள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியையும் மேலும் பலப்படுத்தி காட்ட வேண்டி உள்ளது. அதுபோலவே, பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக தன் பக்கம் முழுமையாக தக்க வைக்க வேண்டியும் உள்ளது.

பாஜக தான் தமிழகத்தில் ஆட்சி என்றால் அதிமுக ஒப்புக் கொள்ளாது. காங்கிரஸ் தான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றால் திமுகவும் ஒப்புக்கொள்ளாது. ஆக, திமுகவும் - அதிமுகவும் ஒரே புள்ளியில் தற்போது இணைந்துள்ளன. "பாஜக எதிர்ப்பு" என்ற புள்ளியில் இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இந்த பாஜக எதிர்ப்பினை யார் அறுவடை செய்ய போகிறார்கள்?

ரெய்டு உட்பட இனியும், அதிமுகவுக்கு பாஜக தொந்தரவை தந்தால், அவையெல்லாம் அதிமுகவுக்கு அனுதாப அலைகளாக திரும்பி விடும். கர்நாடகத்தில் சிவக்குமாருக்கு தரப்படாத தொந்தரவுகளா? அதையெல்லாம் தாண்டிதானே வந்திருக்கிறார்கள். எனவே, "வசதி, ஆடம்பர கல்யாணம்" என்பது எப்போதுமே நிலைத்து நிற்காது.

Updated On: 28 Sep 2023 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு