யாருடன் கூட்டணிஅமைக்கும் பாஜக..?

யாருடன் கூட்டணிஅமைக்கும் பாஜக..?
X

பைல் படம்

கூட்டணியை அதிமுக முறித்துள்ள நிலையில் எந்த கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது

அண்ணாமலையின் முடிவு அதன் வெளிப்பாடே அவர் பொள்ளாச்சி என் மண் என் மக்கள் பாதயாத்திரையில், அரசியல் மாற்றத்தை பார்க்க வேண்டும் என்பதால், சிலரை எதிர்த்து நிற்கும் காலம் இது என குறிப்பிட்டார், ஏனென்றால் தான் மாநில தலைவர் என்ற நம்பிக்கையை மக்களிடம் இழந்துவிட தயாராக இல்லை என தெரிவித்தார்.

தான் சிலரை எதிர்த்து நிற்க தயாராகி விட்டதாக கூறிய அண்ணாமலை, அதே போன்ற நிலைப்பாட்டையே பாஜகவும் எடுக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார். இதன் மூலம் அதிமுகவை தான் மறைமுகமாக அண்ணாமலை கூறுகிறார் என்ற கருத்துகள் பேசப்பட்டு வருகின்றது.

முடித்து வைத்த அதிமுக.. இந்நிலையில், தான் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை அமைக்கவும் அக்கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ள பாஜகவின் கூட்டணியில் யார் யார் இணைவார்கள் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. தேமுதிக, பாமக, அமமுக போன்ற கட்சிகளின் ஆதரவு ஓபிஎஸ் அணியின் ஆதரவு போன்றவை பாஜகவிற்கு ஆதரவான முடிவை எடுக்கலாம். சசிகலாவின் ஆதரவும் பா.ஜ.க. வுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க.வும் சில கட்சிகளை தங்கள் பங்குக்கு துாக்கும் என்ற நிலை உருவாகி உள்ளதால், இனி வரும் நாட்களில் மட்டுமே தமிழக அரசியல் களத்தில் என்ன நடக்கும் என்பது தெரியவரும். தவிர வெற்றி பெற்றால் தங்கள் கூட்டணி கட்சிக்கு மத்தியில் அமைச்சர் பதவி, அல்லது அகில இந்திய அளவில் பெரிய பொறுப்புகள் தருவதாக சொல்லி பா.ஜ.தனது கூட்டணிக்கு ஆள் சேர்க்கும் படலத்தினை வெகு விரைவில் துவக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story