இலங்கையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தது என்ன

இலங்கையில்  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தது என்ன
X
பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு சென்று என்ன தீர்வை பெற்று வந்தார் என்கிற விஷயத்தை பார்க்கலாம்

பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு சென்று என்ன தீர்வை பெற்று வந்தார் என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும். அப்படி என்ன முக்கியமான தீர்வு.

ஆம் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக பகுதி மீணவர்களுக்கு சிறப்பு அனுமதி அட்டையினை வழங்க இலங்கை அரசு முன்வந்துள்ளது. இதன்படி ஆபத்தில்லா சில வலைகளை பயன்படுத்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க முழு உரிமை வழங்கபடுகின்றது.

ஆனால் இலங்கை நாட்டுக்குள் அவர்களால் நுழைய முடியாது. இனி இலங்கை கடற்பரப்பில் இந்த உரிமம் வைத்திருக்கும் மீணவர்களை இலங்கை கடற்படை தண்டிக்க முடியாது, அதே நேரம் போதை மற்றும் தங்க கடத்தல் சோதனைகள் கடுமையாக தொடரும். ஆக பல்லாண்டு கால சிக்கலுக்கு மோடி அரசு பெரும் தீர்வினை வழங்கியுள்ளது

இந்த திட்டம் இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது, எதிர்பார்த்தபடியே வட இலங்கை தமிழ் மீனவர்கள் இதனை எதிர்க்கின்றனர். அதாவது தொப்புள் கொடி மீனவர்கள் வருகை தொப்புள் கொடியாலே எதிர்க்கப்படுகின்றது."தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வலையும் கடலும் வேறடா.." என்பது இதுதான், ஆக, இனி கச்சதீவினை தாண்டி உரிய அனுமதியுடன் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம் பன்னெடுங்கால சிக்கல் தீர்ந்தது.

இதுவரை எந்த பிரதமரும் செய்யாத தீர்வினை மோடி செய்திருக்கின்றார். இப்படியான வரலாற்று சிறப்புமிக்க சாதனையினை அண்ணாமலை செய்த பின்னும் தமிழக ஊடகமும், தமிழக பாஜக ஐடி விங்க்கும் சும்மா இருக்கின்றதல்லவா? இது தான் தமிழ்நாடு. தமிழக ஊடகங்களை விடுங்கள், தமிழக பாஜகவினர் என்ன செய்கின்றார்கள்? ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உச்சகட்ட சோகம்

Tags

Next Story