வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்துவோம்: அதிமுக வேட்பாளர்கள் வாக்குறுதி

வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்துவோம்:  அதிமுக வேட்பாளர்கள்  வாக்குறுதி
X
கூடலுாரில் ஒருங்கிணைந்து ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர்கள்.
சிதறிக்கிடக்கும் வாக்காளர்பட்டியலை ஒழுங்குபடுத்துவோம் என கூடலுார் நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளனர்

தமிழகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து விட்டது. தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை பார்த்ததும், ஆளும் கட்சி வேட்பாளர்கள் தவிர மற்ற அனைவருக்கும் தலைசுற்ற வைத்து விட்டது.

அத்தனை குழப்பங்கள். ஆளும் கட்சி வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர்களை அடையாளம் கண்டு பிடிக்க கூடாது என்பதற்காக வாக்காளர் பட்டியலை நெல்லிக்காய் மூட்டை போல் சிதறடித்துள்ளனர். ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் இதுபோல் நடந்தால் பரவாயில்லை. பெரும்பாலான இடங்களில் இதே நிலைதான்.

இன்று தேர்தல் பிரசாரம் முடிந்து விட்ட நிலையில், திமுக வேட்பாளர்களை தவிர பிற கட்சி வேட்பாளர்கள் யாரும் தங்கள் வார்டில் உள்ள வாக்காளர்களை இதுவரை முழுமையாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் உண்மை என்றாலும், இது தான் புதிய அரசியல் டிரெண்ட் ஆக உருவெடுத்துள்ளது. இந்த நிலையை கண்ட கூடலுார் நகராட்சி அதிமுக வேட்பாளர்கள் 20 பேரும் இதனை ஒரு தேர்தல் வாக்குறுதியாகவே கொடுத்துள்ளனர். அவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள 19 வாக்குறுதிகளில் 11வது வாக்குறுதியாக, மக்கள் தாங்கள் வசிக்கும் வார்டுகளிலேயே வாக்காளராக பதிவு செய்யப்படுவார்கள் என அதிரடியாக அறிவித்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா