அதிசயம் ஆனாலும் உண்மை.. ஏழு விதமான ஆச்சரியங்கள் !
பைல் படம்
1.மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் கட்டாயம் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன் கடமைகளைச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்.
2. ஒரு நாளில் உலகில் காணும் பொருள்கள் அனைத்தும் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், அந்த பொருள்களின் மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்.
3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்த படியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்.
4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்.
5.நரகம் போன்ற வேதனைகளை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் மேலும் மேலும் பாவம், தவறுகளை செய்வது ஆச்சரியம்.
6. இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது ஆச்சரியம்.
7. சுவர்க்கம் போன்ற மன நிறைவான வாழ்க்கையைபற்றி அறிந்த மனிதன், புண்ணியங்களை சேர்க்க மறந்து உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே தனது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம். இந்த பதிவை பார்க்கும் நமக்கும் இதற்கும் ஒற்றுமை உள்ளதா என்று பார்க்காமல் இருப்பதும் ஆச்சரியமே.., ஆச்சரியம் ஆனாலும் உண்மையே.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu