குழாய் உடைப்பால் எண்டப்புளி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

குழாய் உடைப்பால் எண்டப்புளி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
X

எண்டப்புளி கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் பெரியகுளம் தண்டுபாலத்தை கடக்கும் இடத்தில் உடைந்துள்ளது. தற்காலிகமாக சீரமைத்தாலும், குடிநீர் வீணாகிறது.

குடிநீர் குழாய் உடைப்பால், தேனி மாவட்டம், எண்டப்புளி கிராமத்தில் 25 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து குழாய் மூலம் எண்டப்புளி கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் பெரியகுளம் தண்டுபாலத்தின் மீது பதித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த இடத்தில் குழாய் உடைந்துள்ளது.

தற்போது தற்காலிகமாக ரப்பர் சுற்றி வைத்துள்ளனர். ஆனாலும் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இந்த இடத்தில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கிராம மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். தேவைக்கு ஏற்ப குடிநீர் இருக்கும் நிலையிலும், நிர்வாக குளறுபடிகளால் நீர் வெளியேறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!