பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை விதிமுறைகள் என்னென்ன?
மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.அதிக மழையோ, கனமழையோ பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது. விடுமுறை குறித்த முடிவை, பள்ளி துவங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக எடுக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் முழுமைக்குமான மழை நிலவரம், பாதிப்பு நிலவரம், மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுமைக்கும் தேவையில்லாமல் விடுமுறை அறிவிக்க கூடாது. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் போது, அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும்.
விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu