கெங்குவார்பட்டியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் புகார்

கெங்குவார்பட்டியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் புகார்
X

பைல் படம்.

கெங்குவார்பட்டியில் தரமற்ற குடிநீர் சப்ளை தொடர்வதால் தொற்றுநோய் பரவல் அதிகரித்து இருப்பதாக மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை இரண்டு மாதங்களுக்கு மேலாக சுத்தம் செய்யவில்லை. குடிநீரையும் குளோரினேஷன் செய்வதில்லை. இந்த குடிநீரை குடிக்கும் மக்களுக்கு காய்ச்சல், உட்பட பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. தவிர கிராமத்தில் கொசுப்புகை மருந்து தெளிப்பதில்லை.

பெண்களுக்கான சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்காததால், அதனை பயன்படுத்த முடியவி்லலை. கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தவில்லை. மொத்தத்தில் கிராமத்தின் சுகாதாரம் மோசமாக உள்ளது. இதுகுறித்து பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!